»   »  பாலிவுட்டில் நட்சத்திரமாகத் துடிக்கும் பிராவோ!

பாலிவுட்டில் நட்சத்திரமாகத் துடிக்கும் பிராவோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேற்கிந்தியத் தீவு வீரர்களின் மிக விருப்பமான நாடு எது என்று கேட்டால் பெரும்பாலும் இந்தியா என்றுதான் சொல்வார்கள்.

தட்ப வெப்பம், சுற்றுச் சூழல் எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவில் இருக்கும்போது எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது என்பார்கள் கெய்ல் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும்.

Bravo's wish to play Bollywood movies

இந்திய சினிமா மீது அவர்களுக்கு தனி காதலே உண்டு.

குறிப்பாக பிராவோ, கெய்ல் போன்றோருக்கு. இவர்களில் பிராவோ ஏற்கெனவே தனது சினிமா இன்னிங்ஸை தமிழில் ஆரம்பித்துவிட்டார். உலா என்ற படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து பாடி ஆடி அசத்தினார்.

அடுத்து பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது பிராவோவின் ஆசை. இதுபற்றி அவர் கூறுகையில், "பாலிவுட்டுக்குள் நுழைவது என் கனவுகளில் ஒன்று. ஒருகட்டத்தில் நிச்சயம் அதைச் செய்துகாட்டுவேன். ஏற்கெனவே சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேசமயம் கிரிக்கெட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன்.

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோருக்கு நான் ரசிகன். ஹிந்திப் படங்கள் நான் பார்த்துள்ளேன். என்னால் சில ஹிந்தி வார்த்தைகளைக் கூடப் பேசமுடியும்," என்றார்.

English summary
West Indies Cricket Player Bravo has expressed his wish to appear in Bollywood movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil