twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “இரவின் நிழல்“ சர்ச்சை.. மனம் திறந்து மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

    |

    சென்னை : இரவின் நிழல் நாயகி பிரிகிடா சேரி மக்கள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடிகர் பார்த்திபன் அவருக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    திரைத்துறையில் தனது முத்திரையை பதிக்க, வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து கையில் எடுத்து வித்தியாச விரும்பி என பெயர் எடுத்தவர் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக அமைந்து பாராட்டுக்களை குவித்தது.

    படம் முழுவதும் பார்த்திபன் மட்டும் திரையில் வந்து வியக்க வைத்திருந்தார். ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்தது.

     “இரவின் நிழல்“ மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..மகிழ்ச்சியில் பார்த்திபன்! “இரவின் நிழல்“ மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..மகிழ்ச்சியில் பார்த்திபன்!

    இரவின் நிழல்

    இரவின் நிழல்

    ஒத்த செருப்பு படத்தைப் போல் மற்றுமொரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்த பார்த்திபன். இரவின் நிழல் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி இதில் அறிமுகமாகியுள்ளார்

    ஏ.ஆர். ரஹ்மான்

    ஏ.ஆர். ரஹ்மான்

    நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. வரக்ஷலமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

    சர்ச்சை பேச்சு

    சர்ச்சை பேச்சு

    வெள்ளிக்கிழமை வெளியான இரவின் நிழல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரிகிடா செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த படத்தின் கதையே தனி மனிதன் வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடக்கிறது. அதை ராவா சொன்னால் தான் புரியும், நாம ஒரு சேரிக்கு போனால் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு எப்படி பேசுவார்கள் என்று பேசியிருந்தார்.

    மனமார வருந்துகிறேன்

    மனமார வருந்துகிறேன்

    சேரி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் என நடிகை பிரிகிடா கூறியதற்கு இணையத்தில் மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த வார்த்தையை சொன்னதற்கு நான் மனமார வருந்துகிறேன். படத்திற்காக இடம் மாறும்போது, ​​மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன், என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

    மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

    நடிகை பிரிகிடா மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் நடிகர் பார்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், "பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே. என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Iravin Nizhal Heroine Brigida saga controversial speech, Director parthiban apologize for fans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X