twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் அட்வான்ஸ் புக்கிங்... மின்னல் வேகத்தில் விற்பனையான டிக்கெட்டுகள்!

    By Shankar
    |

    சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்துக்கான முன்பதிவு இன்று காலை பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது.

    தொடங்கிய வேகத்திலேயே அத்தனை அரங்குகளிலும் முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    Brisk advance booking for Rajini's Kochadaiiyaan

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இல்லாத அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து டிக்கெட்டுகள் பெற்று வருகிறார்கள்.

    ரஜினியின் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவது தங்கள் தலைவரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்றுதான். முதல் ஷோவுக்கு வாய்ப்பில்லாவிட்டாலும், முதல் நாளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அன்றைக்குள் டிக்கெட்டுகளை வாங்க பல மணி நேரம் க்யூவில் காத்திருக்கவும் தயங்குவதில்லை.

    முன்பு எந்திரன் வெளியானபோது, நள்ளிரவு 1 மணிக்கு டிக்கட் கவுண்டரில் ரசிகர்கள் காத்திருந்தது நினைவிருக்கலாம்.

    இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படம் கோச்சடையான் வெளியாகிறது. இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போது முன்பதிவு தொடங்கும் என காத்திருந்தவர்கள், அறிவிப்பு வெளியான உடனே ஆன்லைனிலும் நேரிலும் டிக்கெட்டுகள் பெற முட்டி மோதினர்.

    சத்யம் சினிமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள அரங்குகளில் 18 திரைகளில் கோச்சடையான் வெளியாகிறது. இவை அனைத்துமே முதல் மூன்று நாட்களுக்கு ஃபுல். ஓரிரு சீட்டுகள் இருப்பதாக இணையதளத்தில் காட்டப்பட்டாலும், அதை பதிவு செய்ய முயன்றால், டிக்கெட் இல்லை என்றே வருகிறது.

    அபிராமி மெகா மால் ஒரு நாள் முன்பே டிக்கெட் விற்பனையை ஆரம்பித்து, அடுத்த மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை விற்றுத் தீர்த்தது. இதுவரை ஓடிக் கொண்டிருந்த ஸ்பைடர்மேன் உள்பட அத்தனை படங்களையும் தூக்கிவிட்டு, கோச்சடையானை மட்டும் 4 அரங்குகளிலும் திரையிடுகிறது அபிராமி.

    16 திரைகள் கொண்ட மாயாஜாலில் கோச்சடையானை நாளொன்றுக்கு மொத்தம் 64 காட்சிகள் திரையிட்டுள்ளனர். 2டி, 3டி, ஆரோ 3டி என அத்தனை வடிவங்களிலும் இங்கு கோச்சடையானைப் பார்க்க முடியும். முதல் நாளன்று எந்தக் காட்சிக்கும் இந்த அரங்கில் டிக்கெட் இல்லை. சனி, ஞாயிறுகளுக்கும் பெருமளவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

    வெளியூர்களில் கோச்சடையான் டிக்கெட்டுகள் பெற ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர்.

    தியேட்டர்களைப் பொறுத்தவரை ரஜினி படம் வெளியாவது ஒரு பெரிய திருவிழாவுக்கு சமம் என்பதை கோச்சடையான் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

    English summary
    Fans stormed to grab their tickets for Superstar Rajini's Kochadaiiyaan in all theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X