'எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு, ஜாமீன்ல விடுங்க..' கைதான நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!
கொச்சி: தனக்கு திருமணம் முடிவாகி இருப்பதால் ஜாமீனில் விட வேண்டும் என்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகை மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் சிலர் கைது செய்யப்பட்டனர். சினிமா துறையை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிரைம் பிராஞ்ச்
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியின் ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக கேரள கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன், அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். அதில் ஏழு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பிரிஸ்டி பிஸ்வாஸ்
மலையாள சினிமாவைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகள் வருவதாக இருந்தது. ரைடு பற்றிய தகவல் சென்றதை அடுத்து அவர்கள் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் ஜாகீர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வளர்ந்து வரும் நடிகை, பிரிஸ்டி பிஸ்வாஸ்.

போதைக் கும்பல்
இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் செய்தும் வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிஸ்டிக்கும் போதைக் கும்பலுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜாமீன் மனு
இந்நிலையில் நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் என் நண்பர்களுடன் வாகமண் ரிசார்ட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு போதை பார்ட்டி நடப்பது பற்றி எனக்குத் தெரியாது.

மரிஜுவானா
என்னை, போலீசார் தவறாக கைது செய்துள்ளனர். நான் தங்கிய பகுதியில் இருந்து. 6.5 கிராம் மரிஜுவானாவை கைப்பற்றியுள்ளனர். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண முன் ஏற்பாடுகள் இந்த மாதம் தொடங்குகிறது. என் படிப்பு தொடர்பான புராஜக்ட்டுகளையும் நான் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரியா சக்கவர்த்தி
இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. பாலிவுட்டில் நடிகை ரியா சக்கவர்த்தி உட்பட
சில பிரபலங்களும் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.


Click it and Unblock the Notifications