»   »  பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு வழங்கியிருக்க சர்டிஃபிகேட் என்ன தெரியுமா?

பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு வழங்கியிருக்க சர்டிஃபிகேட் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பத்மாவதி படத்தை பிரிட்டனில் ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

இயக்குநர் சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பத்மாவதி. 190 கோடி ரூபாய் செலவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருக்கிறது பத்மாவதி படம்.

ராஜ புத்திர இனத்தின் ராணியான பத்மாவதியை கொச்சைப்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜ புத்திரர் இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலைமறியல் கொடும்பாவி எரிப்பு என பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போது ரிலிஸ்?

எப்போது ரிலிஸ்?

தொடரும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளால் சென்சார் போர்டும் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அறிவித்தபடி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி படம் ரிலிஸாவது கேள்விக்குறியாகியுள்ளது.

12ஏ சான்றிதழுடன்

12ஏ சான்றிதழுடன்

இந்நிலையில் பிரிட்டனில் படத்தை ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன் சென்சார் போர்டு 12ஏ என்ற ரேட்டிங் சான்றிதழை வழங்கியுள்ளது.

படத்தில் கத்தரிபோடவில்லை

படத்தில் கத்தரிபோடவில்லை

படத்தின் எந்த இடத்திலும் பிரிட்டன் சென்சார் போர்டு கத்தரிபோடவில்லை. கொடுத்ததை கொடுத்தப்படியே 12 ஏ ரேட்டிங் சான்றிதழுடன் வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.

12 வயது + அடல்ட்ஸ்

12 வயது + அடல்ட்ஸ்

அதாவது 12 ஏ என்றால் இந்தப் படம் 12 வயது குறைந்த சிறுவர்கள் பார்க்க கூடிய வகையில் இல்லை என்றும், 12 வயது நிரம்பியவர்கள் மற்றும் அடல்ட்ஸ் பார்க்கலாம் என்பதாகும். அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகவுள்ள படத்தின் பட்டியலில் 'மிதமான வன்முறை, காயம் விவரம்' என்ற கமெண்ட்டுடன் பத்மாவதியையும் சேர்த்துள்ளது பிரிட்டன் சென்சார் போர்டு.

English summary
The British Board of Film Classification has cleared without cuts the costume drama with a 12A rating - meaning it cannot be viewed by a child below 12 unless accompanied by an adult - for December 1 release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil