Bro Code: இசைஞானி எதிர்பார்ப்பது இதைத்தான்.. நன்றாக புரிந்து கொண்ட ப்ரோ கோட் இயக்குநர்!

சென்னை: ரவி மோகன் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படி இருக்கும்போது, நேற்று முன் தினம் அதாவது ஆகஸ்ட் 27 ஆம் தேதி அவர் தயாரித்து நடித்துள்ள படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வெளியானது. ப்ரோமோவில் இளையராஜாவின் பாடலான கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இசைஞானி இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் ப்ரோ கோட். இந்த படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கௌரி பிரியா, ஷர்தா ஸ்ரீநாத் மாளவிகா மனோஜ், இயக்குநர் பேரரசு, ஐஸ்வர்யா ராஜ் என பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். ப்ரோமோவை பார்க்கும்போது, என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா என்று ஜாலியாக இருக்கும் கணவர்களின் மனநிலையை பிரதிபலிப்பது போல உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த ப்ரோமோவின் டெம்போவை ரசிகர்களுக்கு எளிதில் உணர்த்தும் விதமாக பயன்படுத்தப்பட்ட பாடல், இளையராஜா இசையில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்ற, கல்யாண மாலை பாடல் பக்காவாக செட் ஆகி இருந்தது.

Bro Code Movie Director Karthik Yogi Meets Ilayaraja For to say Thanks His Song Its Used Bro Code Promo
Photo Credit:

இளையராஜா: பொதுவாகவே சமகால பாடங்களில், இளையராஜா இசையமைக்காத படங்களில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்படுகிறது என்றாலே, அவரிடம் முறையான அனுமதி வாங்கியும் சிலர் பயன்படுத்துகிறார்கள், சிலர் அனுமதி வாங்காமலும் பயன்படுத்துகிறார்கள். அண்மையில் கூட நடிகை வனிதா இயக்கி நடித்த படமான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இளையராஜாவின் பாடல், அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டது. இதனால் வனிதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது சம்பவங்கள் பல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் அனுமதி வாங்காமல் பயன்படுத்தப்பட்டது.

Bro Code Movie Director Karthik Yogi Meets Ilayaraja For to say Thanks His Song Its Used Bro Code Promo
Photo Credit:

வெற்றியும் சர்ச்சையும்: அதே நேரத்தில், கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்தில் இளையராஜா இசையில் உருவான பொட்டு வெச்ச தங்ககுடம் பாடல் பயன்படுத்தப்பட்டது. அந்த பாடல் படத்தின் வெற்றிக்கும் உதவியாக இருந்தது. இந்த பாடலை இளையராஜாவிடம் முறையான அனுமதி வாங்கி பயன்படுத்தியது படக்குழு. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி செம ஹிட் அடித்த மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் இளையராஜா இசையில் உருவான கண்மணி அன்போடு காதலன் பாடல் அவரிடம் முறையான அனுமதி வாங்காமல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சர்ச்சைகளும் எழுந்தது.

சந்திப்பு: இந்நிலையில் இப்படியனா சர்ச்சைகள் வேண்டாம், இசைஞானி இளையராஜாவிடம் முறையான அனுமதியை வாங்கி, அவரது பாடலைப் பயன்படுத்துவது என்பதுதான் சரி, என்பதை புரிந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் படக்குழு இசைஞானியை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இசைஞானி தனது பாடலை பயன்படுத்துவதற்கு பணம் கேட்பதில்லை, அனுமதி வாங்கிவிட்டு பயன்படுத்தச் சொல்லுகிறார் என்று இயக்குநர் கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X