»   »  பாலிவுட்டில் துல்கருக்கு ஜோடியாகும் 'ப்ரூஸ்லீ' நடிகை!

பாலிவுட்டில் துல்கருக்கு ஜோடியாகும் 'ப்ரூஸ்லீ' நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : மலையாளத்தில் பிஸியாக நடித்துவரும் துல்கர் சல்மான் முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் படத்துக்கு 'கர்வான்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகாஷ் குரானா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தில் இர்ஃபான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இர்ஃபான் கானுக்கு ஜோடியாக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். இந்தப்படத்தில் துல்கருக்கு ஜோடி இல்லை என்று சொல்லப்பட்டது.

Brucelee heroine pair with dulquer in bollywood movie

ஆனால் தற்போது துல்கருக்கு ஜோடியாக, 'ப்ரூஸ்லீ' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த க்ருத்தி கர்பந்தா நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணி கொண்ட இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையாக உருவாகிறதாம்.

Brucelee heroine pair with dulquer in bollywood movie

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 'கர்வான்' படத்தைத் தொடர்ந்து நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.

English summary
Dulquer Salman's first film in Bollywood is Karwaan. 'Brucelee' fame Kriti Kharbanda will pair with Dulquer salman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil