twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவின் வியர்வை மகளுக்கு அணிவித்த கிரீடம்.. மிஸ் தமிழ்நாடாக மாறிய கட்டடத் தொழிலாளியின் மகள்!

    |

    சென்னை: செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பல ஆயிரம் மாடல்களுக்கு இடையே போட்டியிட்டு இப்படியொரு பட்டத்தை ரக்சயா வென்றுள்ளார்.

    சிறு வயது முதலே குடும்ப கஷ்டத்தை அறிந்து வளர்ந்த இவர் பார்ட் டைமாக வேலைக்கும் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    பாடகியா?மாடல் அழகியா?அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த..அரபிக் குத்து ஜோனிடா காந்தி!பாடகியா?மாடல் அழகியா?அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த..அரபிக் குத்து ஜோனிடா காந்தி!

    மிஸ் தமிழ்நாடு

    மிஸ் தமிழ்நாடு

    செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா, ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு போட்டியில் வெற்றிப் பெற்று மிஸ் தமிழ்நாடு டைட்டிலையும் கிரீடத்தையும் சூடியுள்ளார். விஸ்காம் படித்து வரும் 20 வயது மாணவி ரக்சயாவிற்கு மாடலிங் துறையில் இருந்த ஆர்வமே அவரை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளது.

    அப்பாவின் வியர்வை

    அப்பாவின் வியர்வை

    தினக்கூலிக்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவரின் மகள் இன்று மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றிருப்பது அவரது தந்தையையும் குடும்பத்தினரையும் சந்தொஷத்தில் ஆழ்த்தி உள்ளது. ரக்சயாவின் கடின உழைப்பு மற்றும் அவரது தந்தையின் வியர்வை தான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பார்ட் டைம் ஜாப்

    பார்ட் டைம் ஜாப்

    சிறு வயது முதலே கஷ்டப்படும் குடும்பத்தில் வளர்ந்து வந்த ரக்சயா தனது பள்ளி, கல்லூரி படிப்பு செலவுக்கு கூட பார்ட் டைம் ஜாப் செய்து வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மாடலிங் துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக தொடர்ந்து பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வந்த அவர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பல ஆயிரம் பேரை பின்னுக்குத் தள்ளி மிஸ் தமிழ்நாடு டைட்டிலை வென்றுள்ளார்.

    மிஸ் இந்தியா டைட்டில்

    மிஸ் இந்தியா டைட்டில்

    மிஸ் தமிழ்நாடு டைட்டிலை வென்ற ரக்சயா அடுத்ததாக மிஸ் இந்தியா டைட்டிலையும் வெல்வேன் என அனைவருக்கும் நன்றி கூறி பேசியுள்ள வீடியோவில் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் தனக்கான உதவிகள் கிடைத்தால், மேலும், பல உயரங்களுக்கு தனது சிறகை விரித்து பறக்க முடியும் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

    English summary
    Building worker daughter Ratchaya won Miss Tamil Nadu title. Fans and Celebrities send wishes to her. She wish to won Miss India title also soon in December this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X