For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2021ம் ஆண்டுக்கான காலண்டர்..மிஸ் தமிழ்நாடு போட்டி என களைகட்டிய சென்னை !

  |

  சென்னை : அழகி போட்டி நடத்துவதும், ஒவ்வொரு ஆண்டுக்கான காலெண்டர் அறிமுகம் செய்வதும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திரை பிரபலங்கள் வைத்து யார் அதில் சிறப்பாக செய்கிறார்கள் என்பது தான் மிகவும் பார்க்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

  QUEENS CALENDAR 2021 LAUNCH | ACTRESS INEYA & AKSHAYA REDDY CHAT | FILMIBEAT TAMIL

  ராஷ்மட்டாஸ் நிறுவனத்துடன் மணப்புரம் ஃபைனான்ஸ் மற்றும் டிக்யூ வாட்சஸ் நிறுவனங்கள் இணைந்து, லக்‌ஷூரி அஃப்பயர் நிகழ்ச்சியை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் சமீபத்தில் நடத்தியது.

  ப்ரீமியம் லைஃப்ஸ்டைலை வித்தியாசமான முறையில் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய லைஃப்ஸ்ஸ்டைல் அஃப்பையர் மற்றும் மிஸ் தமிழ்நாடு 2021 நிகழ்ச்சியில், முன்னணி பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகவும், நடுவர்களாகவும் கலந்துகொண்டனர்.

  மறக்கமுடியாத

  மறக்கமுடியாத

  எலைட் மற்றும் ப்ரீமியம் பார்வையாளர்களை இலக்காகக்கொண்டு, ராஷ்மட்டாஸ் குழுமம் நடத்திய எட்டாவது லைஃப்ஸ்டைல் அஃப்பையர் நிகழ்ச்சியில் 40 வகை முன்னணி லக்‌ஷூரி பிராண்ட் மற்றும் வெட்டிங் சர்வீஸ் நிறுவனங்கள் இணைந்து மறக்கமுடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டன.

  அழகிய பெண்கள்

  அழகிய பெண்கள்

  மிஸ் தமிழ்நாடு: முதலில் இந்த போட்டி, பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இரு தரப்பினருக்குமே மிகவும் இனிமையான, உற்சாகமூட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அழகிய, புத்திக் கூர்மையுள்ள பெண்கள் கலந்துகொண்டார்கள்.

  நேருக்கு நேர் கேள்வி பதில்

  நேருக்கு நேர் கேள்வி பதில்

  இப்போட்டி அழகுக்காக மட்டுமின்றி அவர்களின் திறமையையும், புத்திக்கூர்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. 13வது சீசனாக நடைபெறும் இந்த போட்டி, சுற்றுலாத்தலங்கள், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை குறித்த கலவையாக இருந்தது. பல்வேறு தணிக்கைகள், அழகிய உடையலங்காரம் மற்றும் நேருக்கு நேர் கேள்வி பதில் போன்றவற்றின் அடிப்படையில், ஊடகம், திரைத்துறை மற்றும் துறைசார்ந்த தகுதிவாய்ந்த நடுவர்களால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!

  தகுதியானவர்களை

  தகுதியானவர்களை

  நடிகை ஐஸ்பர்யா டட்டா, பேஷன் ஷோ இயக்குநர் விக்னேஷ், சைக்காலஜிஸ்ட் அபிலாஷா, அக்சரா ரெட்டி, . மாதவி போஸ், மாதவி கங்காதரன் , சுதா ராஜன் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்க நடுவர்கள். பல விதமான சுற்றுகள் புது புது போட்டி என்று தகுதி வாய்ந்த திறமைசாலிகளை சிறப்பு விருந்தினர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள் .

   40 வகையான

  40 வகையான

  இந்த அவார்ட் வழங்கும் விழா எட்டாவது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. ப்ரீமியம் லைஃப்ஸ்டைல் பிராண்டுகளுக்கு, அவர்களுடைய தயாரிப்பின் நுட்பம், அர்ப்பணிப்பு, உன்னதம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 40 வகையான பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன. வெளிப்படையான மற்றும் தரமான விற்பனைச்சந்தையை உருவாக்குவதே இந்த அவார்ட் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

  தென்னிந்திய சினிமாத்துறையை

  தென்னிந்திய சினிமாத்துறையை

  இந்த விருது சற்று தனித்தன்மை வாய்ந்தது. வெட்டிங் பிளானர் நிறுவனங்களுக்கு பார்வையாளர்களே இறுதி நடுவர்களாக வாக்கெடுப்பு முறையில் வழங்கப்படும் விருதாகும். வெட்டிங் பிளானர் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்திக்கவைத்து, இவர்களுடன் பார்வையாளர்களையும் உரையாடவைத்து மிகசிறந்த வகையில் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நான்கு தென்னிந்திய சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் மூலம் இந்த விருது வழங்கப்படுகிறது.

  கோலிவுட் நடிகைகளாக

  கோலிவுட் நடிகைகளாக

  போட்டோகிராபி, ஈவண்ட் மேனேஜ்மெண்ட், மேக் அப், ஃபேஷன் டிசைன் மற்றும் வி.ஜே/ஆர்.ஜே படிப்புகளை வழங்கக்கூடிய கிரவுன் இன்ஸ்டிடியூட் ஃபார் பிசினஸ் நிறுவனமும், ஸ்டைலிஸ்ட் சாந்தினி கண்ணாவும் இணைந்து அழகு ராணிகளை அறிவிக்கவுள்ளனர். மேலும், 2021ம் ஆண்டுக்கான காலண்டரையும் அறிமுகம் செய்கிறார்கள். கோலிவுட் நடிகைகளாக ஷாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால், உபாசனா, இனியா, விமலா ராமன், பாவனா, சஞ்சிதா ஷெட்டி, ஜனனி ஐயர், ஷ்ருதி செல்வம், ஆர்த்தி வெங்கடேஷ், விஜயலக்‌ஷ்மி மற்றும் அஞ்சனா கீர்த்தியின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இந்த காலண்டரில் இடம்பெற்றிருக்கும்.

  ஷண்முகப்ரியா

  ஷண்முகப்ரியா

  நடிகை ஐஸ்வர்யா டட்டா, ஈவண்ட் மேனேஜர் ஜோ மைக்கேல், சைக்காலஜிஸ்ட் அபிலாஷா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். தாட்சாயினி சாந்தசொரூபன் வின்னராகவும், ஷண்முகப்ரியா ஃபர்ஸ்ட் ரன்னர் அப் ஆகவும், கீர்த்தனா கிருஷ்ணன் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவிட் லாக்டவுனுக்குப் பின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும், தமிழக அரசின் விதிமுறைகளுக்கு மிகவும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கினர்.

  Read more about: year ender 2020
  English summary
  Calendar for the year 2021 featuring Kollywood actresses
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X