twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்கள் பயண செலவு எங்கள் தின உணவு ...விஜய் சேதுபதி வெளியிட்ட 'கால் டாக்ஸி' பட டீசர்!

    |

    சென்னை. : கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக "கால்டாக்ஸி" உருவாகி வருகிறது.

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

    இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", "டக்கு முக்கு டிக்கு தாளம்", ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

    சமுத்திரக்கனி

    சமுத்திரக்கனி

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள்.

    அரசாங்கம் எடுத்து

    அரசாங்கம் எடுத்து

    கால் டாக்ஸி டிரைவரின் வாழ்க்கை , வாழ்க்கை லட்சியங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்ற பல விஷங்களை திரைக்கதையில் அமைத்து இந்த படம் சமூக அக்கறையுடன் வருகிறது என்பது கூடுதல் தகவல். கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கால் டாக்ஸியை ஏன் அரசாங்கம் எடுத்து நடத்தி மக்களுக்கு சேவை செய்ய கூடாது என்ற கேள்வியும் இந்த படத்தில் இருக்கும் என்று பலராலும் சொல்லபடுகிறது.

    சந்திக்கும் மனிதர்கள்

    சந்திக்கும் மனிதர்கள்

    கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து பட்டணத்தில் வேலை செய்யும் பல இளைஞர்கள் சரியான வேலை கிடைக்காமல் கடைசியில் அல்லோலப்பட்டு கடன் வாங்கி , கார் வாங்கி கால் டாக்ஸி ஓட்டுகிறார்கள். இன்னும் சிலர் பைக் ஓட்டி பல கஸ்டமர்களை பிக்கப் டிராப் செய்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் சிந்திக்கும் அன்றாட விஷங்களை பின்னணியாக வைத்து ஒரு அற்புதமான திரைக்கதை அமைத்து இந்த படத்தை வெளி கொண்டு வர இருக்கிறார்கள்

    பயண செலவு

    பயண செலவு

    நல்ல படைப்புக்களை தமிழ் சினிமா ஒரு போதும் கை விடுவதில்லை . அந்த வகையில் இந்த படமும் பல பேரை சென்று அடையும் என்று பட குழுவினர் தீர்க்கமாக நம்புகின்றனர் . உங்கள் பயண செலவு எங்கள் தினசரி செலவு என்று ஓட்டுனர்களின் வழியை பேசும் படமாக மட்டும் இல்லாமல் கால் டாக்ஸி ஓட்டும் ஒரு சிலர் பல தவறான செயல்கள் செய்து அந்த தொழில் மீது இருக்கும் மதிப்பை கெடுத்து விடுகிறார்கள். அப்படி பட்ட நிகழ்வுகளை காட்சிகளாக மாற்றி இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் . பெரும் நகரங்களில் கால் டாக்ஸி என்ற ஒன்று இப்பொழுதெல்லாம் மிகவும் அத்தியாவசியம் ஆன ஒன்றாக மாறி விட்டது . ஆட்டோ மற்றும் கைரிக்ஷாக்கள் காலம் கடந்தும் பல இடங்களில் ஓடி கொண்டு தான் இருக்கிறது. கால் டாக்ஸி என்ற இந்த படம் பக்குவமாக பல கதைகள் சொல்லும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

    English summary
    'Call Taxi' teaser released by Vijay Sethupathi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X