»   »  கால்ஷீட் மேனேஜர்களுக்கு கட்

கால்ஷீட் மேனேஜர்களுக்கு கட்

Subscribe to Oneindia Tamil

நடிகர், நடிகையரின் கால்ஷீட் மேனேஜர்கள் என்ற பெயரில் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்து வருவோரின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவர்களுக்கு தடை விதித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி முடிவெடுத்துள்ளது.

தமிழ்த் திரையுலகம் முன்பு போல இல்லை. இப்போதெல்லாம் ஒவ்வொரு நடிகரும், நடிகையும், தங்களுக்கென தனியாக பி.ஆர்.ஓ மற்றும் கால்ஷீட் மேனேஜர்களை வைத்துக் கொள்கிறார்கள். கால்ஷீட் மேனேஜர்கள் மூலம் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்தால் அந்த மேனேஜருக்கு நடிகர் அல்லது நடிகை 10 சதவீத சம்பளப் பணத்தை கமிஷனாக தர வேண்டும்.

ஆனால் இந்த முறையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சில கால்ஷீட் மேனேஜர்கள், நடிகர், நடிகையரின் சம்பளத்தை இவர்களாகவே அதிகமாக கூறி தயாரிப்பாளர்களிடம் பெரும் பணத்தைக் கறப்பதாக தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் புகார் வந்தது.

இப்படிப்பட்ட மேனேஜர்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையருக்கும் கூட பல சிக்கல்கள் வந்து சேர்ந்தன.

புகார்கள் குவிந்ததால் தயாரிப்பாளர் கவுன்சில் நடவடிக்கையில் குதித்தது. இதுபோன்ற பணம் கறக்கும் சில கால்ஷீட் மேனேஜர்களைத் தடை செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 6 கால்ஷீட் மேனேஜர்களுக்கு நிரந்தரமான தடையை தயாரிப்பாளர் கவுன்சில் விதித்துள்ளது. இருப்பினும் அந்த மேனேஜர்களின் பெயர்களை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் மறுத்து விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil