»   »  சீச்சீ இவ்ளோ ஆபாசமா?: கம்போடிய நடிகைக்கு ஓராண்டு தடை விதித்த அரசு

சீச்சீ இவ்ளோ ஆபாசமா?: கம்போடிய நடிகைக்கு ஓராண்டு தடை விதித்த அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நோம் பென்: கம்போடியாவை சேர்ந்த நடிகை டென்னி க்வான் ஓவர் கவர்ச்சி காட்டுவதாகக் கூறி படத்தில் நடிக்க ஓராண்டு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

கம்போடியாவை சேர்ந்தவர் நடிகை டென்னி க்வான்(24). அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு அரசு அதிர்ச்சி அளித்துள்ளது.

டென்னி

டென்னி

டென்னி க்வான் ஓவர் கவர்ச்சி காட்டுவதாகக் கூறி அவர் படங்களில் நடிக்க ஓராண்டு காலம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கம்போடியா நாட்டு கலாச்சாரத் துறை.

உடை

உடை

டென்னியை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளது கலாச்சாரத் துறை. அவரின் உடை ஆபாசமாக இருப்பதாகவும், அது அந்நாட்டு கலாச்சாரத்திற்கு ஒத்துவராது என்றும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

டென்னி க்வானுக்கு ஃபேஸ்புக்கில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். தான் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை டென்னி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இல்லை

இல்லை

நான் ஒன்றும் படங்களில் ஆபாசமாக எல்லாம் நடிக்கவில்லை. பிற நடிகைகளை போன்று உணர்ச்சிகளை தூண்டும்படி ஓவர் கவர்ச்சியும் காட்டவில்லை. இந்நிலையில் எனக்கு தடை விதித்துள்ளார்களே என்கிறார் டென்னி.

English summary
Cambodian government has banned actress Denny Kwan from acting in movies for a year for being too sexy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil