»   »  நடிகை உடை மாற்றும் அறையில் ஓட்டை போட்ட கேமராமேன்

நடிகை உடை மாற்றும் அறையில் ஓட்டை போட்ட கேமராமேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகை அறையில் ஓட்டை போட்ட கேமராமேன்!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: தான் உடை மாற்றும் அறை சுவரில் டிவி சீரியல் குழுவை சேர்ந்த ஒருவர் ஓட்டை போட்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

1970களில் பிரபலமாக இருந்த ஹாலிவுட் தொலைக்காட்சி சீரியல் ஒன்டர் உமன். அதில் டயானா பிரின்ஸாக நடித்தவர் அமெரிக்க அழகி லின்டா கார்டர்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லின்டா கார்டர் தனக்கு நடந்த கொடுமை பற்றி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

அறை

அறை

நான் ஒன்டர் உமன் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது கேமரா மேன் ஒருவர் நான் உடை மாற்றும் அறை சுவரில் ஓட்டை போட்டார். அவரை பிடித்து வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.

லின்டா

லின்டா

தவறு செய்த அந்த கேமரா மேனை தண்டித்துவிட்டனர். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. அந்த ஆள் பற்றி நான் என் தோழிகள் தவிர வேறு யாரிடமும் கூறியது இல்லை.

கவலை

கவலை

எனக்கு ஒரு ஆண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் செய்த செயலுக்கு அவருக்கு ஏற்கனவே தக்க தண்டனை கிடைத்துள்ளது. இது குறித்து நான் மேலும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆண்கள்

ஆண்கள்

பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் துணிச்சலாக பேசத் துவங்கியுள்ளனர். இது ஆண்களுக்கு தான் புதிய செய்தி, பெண்களுக்கு அல்ல. பெண்கள் கால காலமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகிறார்கள் என்கிறார் லின்டா.

English summary
1970s wonder woman Lynda Carter said in an interview that a cameraman drilled a hole in her dressing room. She added that he was caught and kicked out of business.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X