அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?
மும்பை : மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் இந்தியில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
முதல் படமே கமர்ஷியல் வெற்றி பெற்று, விருதுகளும் கிடைத்ததால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த குட் லக் ஜெர்ரி படம் சமீபத்தில் தான் ரிலீசானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக Mili, Mr and Mrs Mahi, Bawaal என வரிசையாக ஜான்வி கபூர் நடித்த 3 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. பாலிவுட்டில் மட்டுமின்றி சோஷியல் மீடியாவிலும் ஜான்வி மிகவும் பிரபலம்.

கிளாமரில் கலக்கும் ஜான்வி கபூர்
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் அத்துமீறிய கவர்ச்சி போட்டோஷுட் போட்டோக்கள் ரசிகர்களின் ஃபேவரைட். இவரின் கிக்கேற்றும் கிளாமர் போட்டோக்களை பார்ப்பதற்காகவே இவரை இன்ஸ்டா பக்கத்தில் 18.1 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இவர்களுடன் நடிக்க ஆசை உண்டா?
இந்த சமயத்தில் குட் லக் ஜெர்ரி படத்தின் ப்ரொமோஷனுக்காக ஜான்வி அளித்துள்ள பேட்டி பாலிவுட்டை அதிர வைத்துள்ளது. அந்த பேட்டியில் ஜான்வியிடம், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் என கொண்டாடப்படும் ஷாருக்கான், அமீர்கான் அல்லது சல்மான் கானுடன் நடிக்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா என கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஜான்வி அளித்துள்ள பதில் தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

அந்த 3 பேருடன் நடிக்கவே மாட்டேன்
அவர் தனது பதிலில், அவங்க எல்லாலோரும் பெரிய ஸ்டார்கள். அவர்களுடன் நடிக்க தான் அனைவரும் ஆசைப்படுவார்கள். எனக்கும் அவர்களுடன் நடிக்க விருப்பம் உண்டு. ஆனால் அவர்களின் வயது காரணமாக நான் அவர்களுக்கு ஜோடியாக நடித்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என ஓப்பனாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களை பேட்டியில் வயதானவர்கள் என ஜான்வி குறிப்பிட்டுள்ளது பலரையும் கொஞ்சம் பதற வைத்துள்ளது.

ஜான்விக்கு இவரை தான் பிடிக்குமா
அது மட்டுமல்ல சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜான்வி, வருண் தவான், ரன்பீர் கபூர் போன்ற இளம் பாலிவுட் ஹீரோக்களுடன் நடிக்கவே தான் விருப்பப்படுவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதோடு, பாலிவுட்டில் திருமணமான நடிகர்களில் ரன்பீர் தான் செக்சியஸ்ட் மேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு ரசிகர்கள்
தென்னிந்திய சினிமா பற்றி பேசும் போது, தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த ஜான்வி, தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது தனக்கு சர்ப்ரைசாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











