»   »  இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்: தனுஷ்

இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்: தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்று ஹாலிவுட் பயணம் பற்றி நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என்று தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரை பலர் கிண்டல் செய்துள்ளனர். இதை அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த மூஞ்சி தான் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளது.

விஐபி 2

விஐபி 2

தனுஷ் தற்போது விஐபி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார். விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ், நடிகை கஜோல், இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். என் சினிமா பயணம் அருமையாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்கிறார் தனுஷ்.

ஆசி

ஆசி

கடவுள் ஆசியால் தான் இந்த அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். உலகம் தற்போது சிறியதாகிவிட்டது. எந்த நாடு அல்லது கண்டத்திற்கு சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு பாலிவுட் படங்கள் பற்றி தெரிந்துள்ளது என்று தனுஷ் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அனைவரும் அனைத்து வித படங்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சினிமாவின் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பல மொழிகளில் நடிக்க முடிகிறது என்று தனுஷ் கூறியுள்ளார்.

English summary
Actor-filmmaker Dhanush, who is gearing up for his first Hollywood film 'The Extraordinary Journey of The Fakir', says he could not ask for more and adds that it has been a great journey for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil