»   »  'பிளேபாய்' ஹெஃப்னர் இல்லாத உலகில் வாழ்கிறோம் என நம்பவே முடியல: வாரிசு நடிகை

'பிளேபாய்' ஹெஃப்னர் இல்லாத உலகில் வாழ்கிறோம் என நம்பவே முடியல: வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளேபாய் பத்திரிகையின் நிறுவனர் ஹ்யூக் ஹெஃப்னர் மறைவுக்கு நடிகை கார்த்திகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பலே புகைப்படங்களுக்கு பெயர் போன பிளேபாய் பத்திரிகையின் நிறுவனர் ஹ்யூக் ஹெஃப்னர் காலமானார். அவருக்கு வயது 91. 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்தவர் ஹெஃப்னர்.

அவர் கடந்த 1953ம் ஆண்டு பிளேபாய் பத்திரிகையை துவங்கினார். ஹெஃப்னர் மறைவு செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹெஃப்னர்

நாம் ஹ்யூக் ஹெஃப்னர் இல்லாத உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை என்று நடிகை ராதாவின் மூத்த மகளான நடிகை கார்த்திகா ட்வீட்டியுள்ளார்.

இரங்கல்

ஹ்யூக் ஹெஃப்னர் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிளேபாய் பத்திரிகை மாடல் ஏப்ரல் சம்மர்ஸ்.

தெறி

ஹ்யூக் ஹெஃப்னர் செத்துப் போயிட்டாரா என்று இளைஞர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து ட்விட்டரை தெறிக்க விட்டுள்ளனர்.

பெண்கள்

ஹ்யூக் ஹெஃப்னர் பெண்களை செக்ஸ் பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தினார் என்று சிலர் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Karthika Nair tweeted that, 'Can't believe we now live in a world with no #HughHeffner !!RIP'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil