»   »  என்னால் அழுகையை நிறுத்தவே முடியலையே: ஸ்ரீதேவி பற்றி சுஷ்மிதா சென்

என்னால் அழுகையை நிறுத்தவே முடியலையே: ஸ்ரீதேவி பற்றி சுஷ்மிதா சென்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை என்று பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் ட்வீட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியுடன் தான் பலரின் நாள் இன்று துவங்கியுள்ளது. என்னது, ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா, நம்ப முடியவில்லையே என்பதே பலரும் கொடுத்த ரியாக்ஷன்.

மீடியாக்காரர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என்று நினைத்த ரசிகர்கள் பின்னர் தான் அது உண்மை என்று புரிந்து கொண்டனர். ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இரங்கல்

வார்த்தையே வரவில்லை. ஸ்ரீதேவி மீது அன்பு வைத்த அனைவருக்கும் அனுதாபங்கள். கருப்பு தினம். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகை ப்ரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அழுகை

ஸ்ரீதேவி மேடம் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அதிர்ச்சியாக உள்ளது. அழுகையை நிறுத்த முடியவில்லை என்று நடிகை சுஷ்மிதா சென் ட்வீட்டியுள்ளார்.

மறைவு

அதற்குள் போய்விட்டாரே என்று ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கவலை தெரிவித்துள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.

சித்தார்த் மல்ஹோத்ரா

ஸ்ரீதேவி மேடம் இறந்துவிட்டார்கள் என்பதை கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா.

கவலை

சோக செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். போனி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Bollywood celebrities have mourned the sudden demise of legendary actress Sridevi. Sridevi died of massive cardiac arrest in Dubai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil