twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதைப் பொருள் எடுத்தால் தான் ட்ரிப் பாடலை இசையமைக்க முடியுமா..சந்தோஷ் நாராயணனின் புது முயற்சி

    |

    சென்னை: திருச்சியைச் சேர்ந்த இசைக்கலைஞர் சந்தோஷ் நாராயணன் தனது ஆரம்ப காலகட்டத்தில் AR ரகுமான் அவர்களிடம் அசிஸ்டன்டாக பணிபுரிந்து அதன் பின்னரே இசையமைப்பாளரானார் .

    அட்டகத்தி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை தனது இசையால் கட்டிப் போட்டவர். ஆட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், காதலும் கடந்து போகும், ஜிகர்தண்டா, கபாலி, காலா என்று ஆல்பம் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர்.

    இயக்குநர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி என்று அவர் கூட்டணி அமைத்த பல இயக்குநர்களின் படங்களில் பாடல்களை வித்தியாசமாகவும் வெற்றிப் பாடல்களாகவும் கொடுத்துள்ளார்.

    இனிமேல் சேரவே வாய்ப்பில்லையா.. பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இடையே அவ்ளோ பெரிய பிரச்சனையா? இனிமேல் சேரவே வாய்ப்பில்லையா.. பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இடையே அவ்ளோ பெரிய பிரச்சனையா?

    இசை மும்மூர்த்திகள்

    இசை மும்மூர்த்திகள்

    தமிழ்நாட்டில் சினிமா இசை என்று எடுத்துக் கொண்டால், அதில் மும்மூர்த்திகளாக கருதப்படுபவர்கள் MS விஸ்வநாதன், இளையராஜா மற்றும் AR ரகுமான். மூவருமே இசையை தெய்வமாக பார்க்கக் கூடிய ஆன்மீகவாதிகள். அவரவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் சில பழக்க வழக்கங்கள் இருந்தாலும் இசையமைப்பது என்று வந்துவிட்டால் அதனை பக்தியுடன் செய்யக் கூடியவர்கள். மனதை ஒருநிலைப்படுத்தி அவர்கள் போட்ட மெட்டுக்கள்தான் உலக தமிழ் மக்களின் மனதை கட்டிப் போட்டவை.

    ட்ரிப் இசையமைப்பாளர்கள்

    ட்ரிப் இசையமைப்பாளர்கள்

    ஆனால் இப்போதிருக்கும் இளைஞர்கள் நிறைய பேர் போதைப் பொருட்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக மேலைநாட்டில் இசை கலைஞர்கள் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டுதான் இசையமைத்து மேடைகளில் கூட நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவார்கள். அதனை பின்பற்றிக்கொண்டு அதனை உட்கொண்டால் இன்னும் சிறப்பாக இசையமைக்கலாம் என்ற நம்பிக்கையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்றாலும், இசையை தாண்டி அவர்கள் சிக்கிக் கொள்ளும் சர்ச்சைகளின் மூலம் அவ்வாறு தான் இருக்குமோ என்று மக்களை நம்ப வைக்கிறது.

    நண்பரின் ஆலோசனை

    நண்பரின் ஆலோசனை

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தான் டீ, காஃபி கூட குடிக்காத டீடோட்டலர். நான் எந்த போதைப் பொருளையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் அப்படி எடுத்தால்தான் நல்ல இசை வரும் என்ற நம்பிக்கையை உடைப்பதற்காகவே சில பாடல்களை ட்ரிப் ஆனது போல் இசையமைப்பேன். அந்தப் பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. சிலர் அந்த பாடல்களை கேட்டுவிட்டு, "என்ன மச்சான் ட்ரிப்பாகி தானே இந்தப் பாட்ட கம்போஸ் பண்ண?" என்று தன்னிடம் கேட்டுள்ளார்களாம். ஒரு நண்பர் இவருக்கு போதைப் பொருளை எடுத்துக் கொண்டு கம்போஸ் செய். இசை இன்னும் சிறப்பாக வரும் என்று ஆலோசனையும் கூறியுள்ளாராம்.

    சோதனை முயற்சி

    சோதனை முயற்சி

    அதனை பொய் என்று நிரூபிப்பதற்காக சொன்ன அந்த நபரையே போதைப் பொருள் எடுக்க வைத்து இசையமைக்கச் சொல்லி, அதனை இவர் படம் பிடித்து பின்னர் தெளிவாக இருக்கும் போது போட்டு காண்பித்தாராம். பார்க்க கேவலமாக இருக்கிறது என்று அந்த நண்பருக்கே தோன்றும் வகையில் அந்தச் சம்பவம் இருந்ததாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

    English summary
    Can you compose Trip song only if you take drugs? Santosh Narayanan's new venture
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X