»   »  இந்த போட்டோவில் நடிகர் விவேக் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்!

இந்த போட்டோவில் நடிகர் விவேக் எங்கிருக்கிறார் என கண்டுபிடிங்க பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேக் தனது இளமை பருவத்தின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விவேக் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ள விஐபி 2 படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸாகிறது. அதாவது படம் தனுஷின் 34வது பிறந்தநாள் அன்று ரிலீஸாகிறது.


Can you guys spot Vivekh in this picture?

விவேக் ட்விட்டரில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது, சக கலைஞர்களை பாராட்டுவதுமாக உள்ளார். மேலும் யாராவது நல்லது செய்தால் அதை பாராட்டி ஊக்குவிக்கவும் அவர் தவறுவது இல்லை.


பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்த்து, இது நான் தானா?, இப்படியா இருந்தேன் என்று நாம் அனைவரும் வியப்பது உண்டு. மேலும் பழைய நினைவுகளை அசைபோடுவதில் ஒரு சுகமும் உண்டு.


இந்நிலையில் விவேக் தனது பழைய குரூப் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் போட்டு அதில் தான் எங்கு உள்ளேன் என்பதை கண்டுபிடிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.English summary
Actor Vivekh has posted an old group picture on twitter and asked his fans to spot him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil