»   »  "கேப்டன்" பராக் பராக்.. மறுபடியும் இந்த "சீன்"களையெல்லாம் நாம் கண்டு களிக்கலாம் மக்களே!

"கேப்டன்" பராக் பராக்.. மறுபடியும் இந்த "சீன்"களையெல்லாம் நாம் கண்டு களிக்கலாம் மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 வருடங்களுக்குப் பின்னர் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் நடிக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தலையாய செய்தியாக மாறி விட்டது.

இதனைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் வரணும் நீங்க பழைய பன்னீர் செல்வமா மீண்டும் வரணும் என்று அவருக்கு ஆதரவளிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

Captain Come Back

கேப்டன் மீண்டும் வருவதால் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரும் இந்த வேளையில் கேப்டனின் வருகையால் என்னென்ன நடக்கலாம் என்பதை (கற்பனையாகத்தான்) பார்க்கலாம்.

தூக்கி அடிக்கலாம்

கேப்டன் சுவற்றில் காலை வைத்து தூக்கி அடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் இனிமேல் அடிக்கடி கண்டு களிக்கலாம். (நிஜத்தில் அவர் பேசிய வசனமே அவருக்கு "கால்" கொடுக்கும்)

தீவிரவாதம்

இனிமேல் ஐஎஸ்ஐஎஸ் "தீவிரவாதிகளை" கேப்டனே தனது சுண்டு விரலால் சுட்டுத் தள்ளுவார் என்பதால் காவல் துறையினர் சற்று சுதந்திரமாக ஓய்வெடுக்கலாம்.

உங்களைப் போல

உங்களைப் போல ஒரு துணிச்சலான அதிகாரியைத் தான் நாங்க எதிர்பார்த்துக் காத்திருந்தோம் என்று இன்டர்போல் போலீஸார் விஜயகாந்துக்கு பொக்கே கொடுத்து பொளேர் சிரிப்புடன் வரவேற்கும் காட்சிகளை கண்டு களிக்கலாம்.. திரையில்.

ஆக்ஷன் தூக்கல்

கேப்டன் இந்தமுறை "வைஸ்" கேப்டனுடன் கைகோர்த்து இறங்குவதால் அவர் அடிக்க, இவர் தூக்கி அடிக்க என்று செம ரகளையாக இருக்கும் படமே.

பன்ச் வசனங்கள்

'துளசி வாசம் மாறினாலும் இந்த தவசி வார்த்தை மாறாது' இது போன்ற பன்ச் வசனங்களை தமிழ் ரசிகர்கள் மீண்டும் கேட்கும் பாக்கியம் கிடைக்கும்.

தீவிரவாதிகள் அட்டகாசம்

கேப்டனின் வருகையால் "தீவிரவாதிகளின் அட்டகாசம்" கட்டுக்குள் வந்தது நாளடைவில் இது படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்படலாம்!

நேர்மையான தமிழகம்

கேப்டனின் படங்களில் தமிழ்நாட்டின் அதிவேக வளர்ச்சியையும் தமிழக முதல்வர் ஆட்டோவில் வந்து இறங்கும் காட்சிகளையும் பார்த்து உங்கள் கண்கள் குளிர ரசிக்கலாம்.

மொத்தத்தில் நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லாத பலவும் இவரது படங்களில் இனிமேல் கலக்கலாக இடம் பெறும் என்பதை தூக்கி அடிச்சு சொல்வதில் பெருமைப்படுகிறோம்!

English summary
After 5 Years Gap Captain Vijayakanth Come back in Tamil Cinema Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil