ஜெயிலரில் கமிட் ஆன அப்டேட் இல்லை… அந்த பிரபலத்தை கேப்டன் மில்லர் ஸ்பாட்டுக்கு வரவைக்கும் தனுஷ்

சென்னை: திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து கேப்டன் மில்லரில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ்.

அருண் மாதேஸ்வரேன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், முக்கியமான பிரபலம் ஒருவர் அதில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கேப்டன் மில்லரான தனுஷ்

கேப்டன் மில்லரான தனுஷ்

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி தனுஷுக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதமே தென்காசி பகுதிகளில் தொடங்கியது.

டிசம்பரில் செகண்ட் ஷெட்யூல்

டிசம்பரில் செகண்ட் ஷெட்யூல்

1980-களின் கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் ஆக்சன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், கேப்டன் மில்லர் மேக்கிங் ஸ்டைல்ஸ் எல்லாமே ஹாலிவுட் படங்களில் வரும் கவ்பாய் கான்செப்ட்டில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷுடன் பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், குமரவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். கேப்டன் மில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், டிசம்பர் 1ம் தேதி முதல் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

ஜெயிலர் பட பிரபலம்

ஜெயிலர் பட பிரபலம்

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பங்கேற்கவுள்ளாராம். கன்னடத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார், ரஜினியின் ஜெயிலர் படத்திலும் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சிவராஜ்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேச்சுகள் அடிபட்டன. ஜெயிலர் படத்தில் நடித்து முடித்ததுமே கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் சிவராஜ்குமார் கலந்துகொள்வார் என சொல்லப்பட்டது. ஆனால், ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடிப்பது குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

தனுஷ் எடுத்த முடிவு

தனுஷ் எடுத்த முடிவு

இதனால், கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் சம்பந்தமான காட்சிகளை முதலில் முடித்துவிடலாம் என தனுஷ் முடிவு செய்துள்ளாராம். இதற்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் ஓக்கே சொல்ல, டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார் என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கும் நிலையில், அவரை சைலண்டாக கேப்டன் மில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவைத்துள்ளார் தனுஷ். முன்னதாக சிவராஜ்குமாரின் தம்பி மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கன்னட அரசு வழங்கிய விருது விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X