»   »  தமிழன் என்று சொல்... மகன் சண்முகப் பாண்டியனுடன் கைகோர்க்கும் கேப்டன்

தமிழன் என்று சொல்... மகன் சண்முகப் பாண்டியனுடன் கைகோர்க்கும் கேப்டன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் 2 வது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்கவிருக்கிறார்.

விருதகிரி படத்திற்குப் பின்னர் சுமார் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்புலக வாழ்க்கைக்குத் திரும்பவிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

Captain Vijayakanth Acts Again

சகாப்தம் படத்திற்குப் பின்னர் சண்முகப் பாண்டியன் நடிக்கும் 2 வது படத்திற்கு தமிழன் என்று சொல் என்று பெயரிட்டு இருப்பதாகவும், இதில் சண்முகப் பாண்டியனுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதுமுக இயக்குனர்களில் ஒருவரான அருண் என்பவருக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sources Said After 5 Years gap Vijayakanth Acts Again with his Son Shanmugapandian, The Official Announcement of this film will be Released Soon.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil