»   »  விபத்தில் பறி போன அழகு: 12 ஆண்டுக்குப் பிறகு ரூ 1.27 கோடி நஷ்டஈடு பெற்ற நடிகை

விபத்தில் பறி போன அழகு: 12 ஆண்டுக்குப் பிறகு ரூ 1.27 கோடி நஷ்டஈடு பெற்ற நடிகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விபத்தில் ஏற்பட்ட தழும்பு காரணமாக பட வாய்ப்புகள் பறி போய் வருமானத்தை இழந்ததாக நடிகை ரேகா ஜெயின் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ 1.27 கோடி நஷ்ட ஈடு கிடைத்துள்ளது.

நடிகைகளுக்கு அழகும், திறமையுமே பெரிய சொத்து. அதிலும் அழகின் மூலமே அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அத்தகைய அழகு ஒரு விபத்தினால் பறி போனால் சும்மா விடுவார்களா..?

ஒரு கொடூர விபத்தில் தன் தாயையும் இழந்து , தன் எதிர்காலத்தையும் தொலைத்தார் நடிகை ரேகா ஜெயின். தற்போது நீதிமன்ற உதவியால் நல்லதொரு எதிர்காலம் சாத்தியமாகியுள்ளது.

சினிமாவில் அறிமுகமான அழகி...

சினிமாவில் அறிமுகமான அழகி...

அழகிப்போட்டி வெற்றி மூலம் கலை உலகில் அறிமுகமானார் ரேகா ஜெயின். முதலில் சீரியல்களிலும், பின்னர் படிப்படியாக ஒரிய திரைப்படங்களிலும் நடிக்கத்தொடங்கினார்.

அட்டகாசமான அறிமுகம்...

அட்டகாசமான அறிமுகம்...

நடித்த முதல் படமான மோ பரி கியே ஹபா மூலம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த புதுமுக நடிகை என விருதுகளை அள்ளிக் குவித்தார் ரேகா. அடுத்தடுத்து மலையாளப் படத்திலும், விளம்பரங்களிலும் தோன்றி புகழ் அடைந்தர். யார் கண் பட்டதோ, 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் நாள் பயங்கரமான விபத்தில் சிக்கினார்.

மோசமான விபத்து...

மோசமான விபத்து...

இவர்கள் சென்ற கார் மீது ட்ரக் ஒன்று மோதியதால், சம்பவ இடத்திலேயே அவரது தாயார் பலியானார். அந்த விபத்தின் வடுக்கள் அவரது மனதில் மட்டுமல்ல, முகத்திலும் எதிரொலித்தன.

கை நழுவின வாய்ப்புகள்...

கை நழுவின வாய்ப்புகள்...

விபத்தினால் ஏற்பட்ட தழும்புகளால் ஏற்கனவே, ஒப்பந்தமான பட வாய்ப்புகள் கை நழுவின. விபத்தினால் தனது எதிர்காலமே பறிபோனதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் ரேகா.

நஷ்ட ஈடு...

நஷ்ட ஈடு...

மருத்துவ வாரியம் அவருக்கு 30 சதவிகிதம் மட்டுமே ஊனம் என சான்றிதழ் அளித்ததால், சம்பல்பூர் மோட்டார் விபத்து தீர்ப்பாயம் அவருக்கு 23.5 லட்சம் நஷ்டஈடு அளிக்கும்படி காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

சாதகமாக தீர்ப்பு...

சாதகமாக தீர்ப்பு...

காப்பீட்டு நிறுவனத்தின் மேல் முறையீட்டால் இந்தத் தொகை 14 லட்சமாக குறைந்தது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ரேகா. தற்போது, அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது

முக அழகே சொத்து...

முக அழகே சொத்து...

அதன் விவரமாவது, ‘ ரேகா ஜெயினின் உடல் ஊனம் 30 சதவிகிதம்தான் என்றபோதிலும், ஒரு நடிகையின் தொழிலுக்கு அவரது முக அழகு ஒரு முக்கிய காரணமாகும். அதனை அவர் இந்த விபத்தில் இழந்ததால் அவரால் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய தொழிலில் ஈடுபடமுடியாது என்ற நடிகையின் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வட்டியும், முதலும்...

வட்டியும், முதலும்...

நடிப்புத் தொழில் வாய்ப்பினை இழந்ததால் ரேகாவின் நஷ்டஈட்டினை, அவர் வழக்கு பதிவு செய்த சமயத்தில் 79.65 லட்சமாகக் கணக்கிட்டு, 2002ஆம் ஆண்டு முதல் இதற்கு 6 சதவிகிதம் வட்டியுடன் மொத்தம் 1.27 கோடி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருடைய தாயாரின் இறப்பிற்காக 10.62 லட்சம் கணக்கிடப்பட்டு, அதற்கும் 6 சதவிகித வட்டியுடன் அளிக்கப்படவேண்டும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    After winning a beauty contest and acting in a few feature films, Rekha Jain was aiming for a successful career as an actress, but a car accident left her shattered. She developed permanent scars on her face, cutting short her career in films and her mother, too, died in the accident. "Thus, the total compensation amounting to Rs 7965,726, which is rounded of to Rs 7966,000, along with interest at the rate of 6% per annum is awarded from the date of application till the date of deposit of the amount," the court said.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more