twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தாரா? கமலின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. பாடகர்கள் கண்டனம்!

    |

    சென்னை: தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என்று கமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக சங்கீத வித்வான்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அண்மையில் விஜய் சேதுபதியுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது தன்னுடைய பல்வேறு சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற இந்த நேரலை நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

    லாக்டவுனில் செம ஒர்க்கவுட்.. இந்த பாகுபலி நடிகர் எப்படி மாறிட்டாரு பாருங்க.. சிக்ஸ்பேக் சூப்பர்!லாக்டவுனில் செம ஒர்க்கவுட்.. இந்த பாகுபலி நடிகர் எப்படி மாறிட்டாரு பாருங்க.. சிக்ஸ்பேக் சூப்பர்!

    பிச்சை எடுத்தார்

    பிச்சை எடுத்தார்

    விஜய்சேதுபதியுடனான இந்த கலந்துரையாடலின் போது கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் குறித்து அவர் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்த வீடியோவில், தியாகராஜர் ‘ராமரைப் புகழ்ந்து பிச்சை எடுத்தார்' என்று கமல் கூறியிருந்தார்.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    இதுதான் கர்நாடக இசை சமூகத்தை ஆத்திரப்பட வைத்துள்ளது. பிரபல பாடகரான பால்காட் ராம்பிரசாத் நடிகர் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு மனுவை உருவாக்கியிருக்கும் அவர், நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஆழமாக அறிவார்கள்

    ஆழமாக அறிவார்கள்

    இதுதொடர்பான அவரது மனுவில், ஒவ்வொரு கர்நாடக இசைக்கலைஞரும், வெளி உலகத்துடனான தங்கள் தொடர்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தங்களது அடிப்படை வாழ்வாதாரம் மற்றும் தொழில்ரீதியான வெற்றியின் ஒவ்வொரு பிட்டிற்கும், கர்நாடக இசையில் ஸ்ரீ தியாகராஜாவின் பங்களிப்புக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆழமாக அறிவார்கள்," என்று ராம்பிரசாத் தனது மனுவில் தெரவித்திருக்கிறார்.

    பக்தியின் காரணமாக

    பக்தியின் காரணமாக

    "தியாகராஜர் மற்றும் ராமர் பற்றிய கமலின் பேச்சு ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சாதி மீது எதிர்மறையாக சுட்டிக்காட்டப்பட்டதை குறிக்கிறது, இது உண்மையில் இந்த நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு அவமானம். தியாகராஜர் அவரது பக்தியின் காரணமாக உஞ்சவர்த்தி செய்தார். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

    கடுமையாக எதிர்க்கிறோம்

    கடுமையாக எதிர்க்கிறோம்

    தியாகராஜர் போன்ற ஒரு புனித ஆத்மாவின் உருவத்தை யாராலும் களங்கப்படுத்த முடியாது. கர்நாடக இசை சகோதரத்துவத்தைச் சேர்ந்த கலைஞர்களான நாங்கள் ஒரு புனித துறவியை அவமதிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் மதிக்கும் ஒருவருக்கு எதிரான உங்கள் மோசமான மற்றும் இழிவான கருத்துக்களுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" இவ்வாறு ராம் பிரசாத் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Carnatic musicians condems actor Kamalhassan for his speech about Thiyagaraja swmigal. They also urges Kamal to Appology for his speech.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X