»   »  எப்பவும் பெப்பர் ஸ்பிரே, பாக்கெட் கத்தி வைச்சுக்கோங்க... இது அபிராமியின் அட்வைஸ்!

எப்பவும் பெப்பர் ஸ்பிரே, பாக்கெட் கத்தி வைச்சுக்கோங்க... இது அபிராமியின் அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக எப்போதும் தங்களது கைப்பையில் பெண்கள் பெப்பர் ஸ்பிரேயும், பாக்கெட் கத்தியும் வைத்திருந்தால் நல்லது என பெண்களுக்கு நடிகை அபிராமி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், முன்னெப்போதும் இருந்ததை விட இந்த மகளிர் தினத்தைப் பெண்கள் வித்தியாசமான எழுச்சியுடன் தான் கொண்டாடி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், நடிகை அபிராமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் மகளிர் தினத்தன்று பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெப்பர் ஸ்பிரே...

பெப்பர் ஸ்பிரே...

பெண்கள் அனைவரும் எப்போதும் பெப்பர் ஸ்பிரேயையும், பாக்கெட் கத்தியையும் எடுத்துச் செல்லுங்கள். யாராவது அத்துமீற நினைத்தால் கத்தி கலாட்டா செய்து, ஏண்டா இப்படி நடந்துகிட்டோம் என்று அவனே ஃபீல் பண்ணும்படி செய்யுங்கள்.

முதலில் எச்சரியுங்கள்...

முதலில் எச்சரியுங்கள்...

ஆண் நண்பர் தவறாக நடக்க முயன் றால், அவர்களிடம் அதை குறிப்பிட்டு நீங்கள் செய்வது தவறு என்று முதலில் எச்சரிக்கை செய்யுங்கள். எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் அவர்களை தாக்குங்கள்.

அமைதியாக இருக்காதீர்கள்...

அமைதியாக இருக்காதீர்கள்...

எது செய்தாலும், அவர்கள் உங்களை தொடுவதற்கு வருந்துகிற அளவுக்கு இருக்க வேண்டும். அத்துடன் அமைதியாக இருந்துவிட வேண்டாம். அதுபற்றி இணையதளத்தில் தெரிவியுங்கள். அதே சமயம் பெண்கள் கவனமாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

36 வயதினிலே...

36 வயதினிலே...

விருமாண்டி, வானவில் உட்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகை அபிராமி, திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மூலம் திரும்பவும் அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While several celebrities took to social media to praise the strength of women on International Women's Day, actress Abhirami had an entirely different point of view
Please Wait while comments are loading...