»   »  ஐ பட வழக்கு வாபஸ்... பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

ஐ பட வழக்கு வாபஸ்... பொங்கலுக்கு படம் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடன் பிரச்சினை காரணமாக படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது பிக்சர் மீடியா ஹவுஸ். படம் பொங்கலுக்கு தடையின்றி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரவிசந்திரனின் தயாரிக்கும் 'ஐ' திரைப்படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பை தருகிறோம்.


I Movie

ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று வெளிவரும் 'ஐ' படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சமூகமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டது.


திரைபடத் துறையின் நலனை முன்னிட்டே இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே 'ஐ' படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப் படுத்துகிறோம். இந்த படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.


-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம் ஐ படம் பொங்கலுக்கு வருவதில் எந்தத் தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

English summary
The case filed a financiar against I was withdrawn and the movie will release as per schedule on Jan 14.
Please Wait while comments are loading...