»   »  ரஜினியின் காலா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

ரஜினியின் காலா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தைத் தடை செய்யக் கோரி சென்னை மாநகர நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இது காப்பிரைட் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

Case against Kaala dismissed

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்துக்கு தடைகோரி, சென்னை 4-வது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது எனவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

பல முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கில், ராஜசேகரன் என்பவரை யாரென்றே தெரியாது என்று ரஜினி தரப்பில் கூறப்பட்டது. இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் ரஜினி, ரஞ்சித் தரப்பில் வாதித்தனர்.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பைக் கூறினார் நீதிபதி தமிழரசி. அதில், வழக்கை டிஸ்மிஸ் செய்வதாகவும், இது காப்பிரைட் தொடர்பான பிரச்சினை என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டார்.

English summary
Chennai Metropolitan Court has dismissed a case against Rajinikanth's Kaala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil