»   »  அதெப்படி ‘கபாலி’க்கு வரிவிலக்கு தரலாம்... ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு

அதெப்படி ‘கபாலி’க்கு வரிவிலக்கு தரலாம்... ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கபாலி. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம், எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பையும், வசூலையும் படைத்தது. மலேசிய டான் பற்றிய இப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்கியது.

Case against Kabali

ஆனால், இந்தப் படத்திற்கு தமிழக வணிக வரித்துறை வரி விலக்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத் துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம், மொழி மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள், வன்முறை, ஆபாச காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த அதிமுக அரசும் அதே நடைமுறையை பின்பற்றியதுடன், படங்களுக்கான வரிவிலக்கை பரிந்துரைக்க குழுவையும் அமைத்தது. இந்த குழுவானது அரசியல் அழுத்தம் காரணமாகவே, அதிகம் செலவு செய்து எடுக்கப்படும் படங்களுக்கும் வரிச்சலுகை அளித்து வருகிறது.

'கபாலி' போன்று பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட பிற படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படவில்லை.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததற்காகவே அந்த படத்திற்கு கேளிக்கை வரிச் சலுகை அளித்திருப்பதாகவே உணர முடிகிறது.

ஆகையால், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு வழங்கிய தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் கடந்த ஜூலை 21 -ஆம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

வரிவிலக்காக பெற்ற தொகையை கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

English summary
A advocate has filed a case in high court against the tax exemption to Rajini starrar Kabali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil