»   »  கன்னட நடிகர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு!

கன்னட நடிகர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கன்னட நடிகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கன்னட நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோர் மீது கோவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Case against Kannada Actors in Coinmbature court

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் நடந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக கன்னட நடிகர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என களமிறங்கினர். தமிழருக்கு எதிராகப் பேசியதுடன், காவிரி நீரைத் தரக்கூடாது என வலியுறுத்தினர். அதன் பிறகுதான் வன்முறை பெரிதாக வெடித்தது.

எனவே கன்னட மக்களை தமிழர்களுக்கு எதிராக இந்த நடிகர்கள் தூண்டியதாக வழக்கறிஞர் ஜெயபபால் என்பவர் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

English summary
A Coimbature based advocate has filed case against Kannada actors including Punit Rajkumar for evoking people against Tamils during Cauvery protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X