»   »  குஷ்பு மீதான வழக்கு ஒத்திவைப்பு!

குஷ்பு மீதான வழக்கு ஒத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

மேட்டூர்: மேட்டூர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது போடப்பட்ட வழக்கு வரும் டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் குறித்து குஷ்பு கொடுத்த சர்ச்சைக்குரிய பேட்டியைத் தொடர்ந்து அவர் மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகம் முழுவதும் போராட்டங்களும் நடந்தன.

வழக்கறிஞர் முருகன் என்பவர் மேட்டூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் குஷ்புவை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குஷ்பு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து குஷ்புவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து குஷ்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனை ஜாமீன் பெற்றார்.

தன் மீதான இந்த வழக்கிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு வழக்கு தொடந்தார். இந் நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று மேட்டூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read more about: kushboo

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil