»   »  ரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி!

ரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் ஜன கன மன ஆல்பத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக ஜனதாக் கட்சி (ஜெபமணி பிரிவு) பொதுச் செயலாளர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,

பணம் பண்ணும் நோக்கத்துடன்தான் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்பது விதி.

ஆனால் இந்த ஆல்பத்தில் 6 முதல் 7 நிமிடங்கள் வரை தேசிய கீதத்தைப் பாடியுள்ளனர். எனவே இந்த ஆல்பத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் மோகன்ராஜ்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில், குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் தேசிய கீதத்தைப் பாட வேண்டும். அப்படி பாட மறுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல. மேலும் தேசிய கீதத்தைப் பாட மறுப்போர் மீதும் கூட நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ளது.

இது விளம்பர நோக்கில் தாக்கல் செய்த மனு. எனவே இதை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil