»   »  ஆபாசப் பட நடிகை, சர்ச்சை இயக்குநர் மீது வழக்குப் பதிவு... ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை!

ஆபாசப் பட நடிகை, சர்ச்சை இயக்குநர் மீது வழக்குப் பதிவு... ஐதராபாத் போலீஸ் நடவடிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட நடிகையான மியா மால்கோவா நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார்.

அந்தக் குறும்படத்திற்கு 'GOD, SEX and TRUTH' என்று டைட்டில் வைத்துள்ளனர். இதனால் ராம்கோபால் வர்மாவுக்கும், மியா மால்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இருவர் மீதும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மியா மால்கோவா

மியா மால்கோவா

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா வில்லங்கமான படம் எடுப்பார், அல்லது வில்லங்கமான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துவார். அவருடைய தற்போதைய பரபரப்பு ஆபாசப்பட நடிகையான மியா மால்கோவை வைத்து 'God sex and truth' என்ற படத்தை இயக்கியதுதான்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

ராம் கோபால் வர்மா இயக்கும் அந்தப் படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக காட்சியளிக்கிறார் மியா மால்கோவா. ராம்கோபால் வர்மா ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கினார் மியா.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இணையதளத்தில் வெளியிட்டு அதன் முகவரியையும் வெளியிட்டார். தற்போது ராம்கோபால் வர்மாவுக்கும், மியா மல்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கலாச்சாரத்தை சீரழிக்கும்

கலாச்சாரத்தை சீரழிக்கும்

இருவர் மீதும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தை கெடுத்து இளைஞர்களை நாசமாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இருவர் மீதும் 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர்.

கைது செய்யப்படலாம்

கைது செய்யப்படலாம்

மேலும், சமூக ஊடகங்களில் ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Ram Gopal Varma has directed a short film starring Mia Malkova, the famous porn star. That short film is titled 'GOD, SEX and TRUTH'. Social welfare organizations have complained against RGV and mia malkova to Hyderabad police. Hyderabad police have filed a case against RGV and mia malkova.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil