»   »  சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது... கமிஷனர் ஆபிஸில் புகார்! #Veeramadevi

சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது... கமிஷனர் ஆபிஸில் புகார்! #Veeramadevi

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் 'வீரமாதேவி' சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன்.

ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தற்போது இந்தியப் படங்களில் நடித்து வருகிறார்.

'வீரமாதேவி' படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் சன்னி லியோன்

தமிழில் சன்னி லியோன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் 'வீரமாதேவி' எனும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

போர்ன் நடிகை இல்லை

போர்ன் நடிகை இல்லை

இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தின் மூலம் சன்னி லியோன் மீதிருக்கும் ஆபாசப் பட நடிகை என்கிற பிம்பம் நிச்சயம் மாறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஷூட்டிங் நடைபெறுகிறது

ஷூட்டிங் நடைபெறுகிறது

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் 'வீரமாதேவி' கேரக்டரில் நடிக்கிறார்.

சன்னி லியோனுக்கு எதிர்ப்பு

சன்னி லியோனுக்கு எதிர்ப்பு

'வீரமாதேவி' படத்தின் ஷூட்டிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் இனோச் மோசஸ், நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஆபாச நடிகை

ஆபாச நடிகை

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் வீரமாதேவி என்ற படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். இணையதளத்தில் காணக் கிடைக்கும் சன்னி லியோன் நடித்த ஆபாச படங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது.

இளைஞர்கள் கூடுவார்கள்

இளைஞர்கள் கூடுவார்கள்

அவர் நடிக்கும் வீரமாதேவி என்ற படம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடந்தால் அவரை பார்க்க அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். எனவே, இந்தப் படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்." என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

English summary
Actress Sunny Leone is acting as heroine in the movie 'Veeramadevi' in Tamil and Telugu languages. A complaint was filed against Sunny leoone to act in tamil by a Chennai-based social activist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil