»   »  கார்த்தியின் தோழா படத்துக்கு தடை கோரி வழக்கு

கார்த்தியின் தோழா படத்துக்கு தடை கோரி வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்தி - நாகார்ஜுனா நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் புதிய படமான தோழாவுக்கு தடை கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தோழா என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாரானது. இதில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.


Case against the release of Thozha

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுந்தரேஸ்வரன் என்கிற சுந்தரம், தன்னுடைய அனுமதியின்றி தோழா என்ற தலைப்பைப் பயன்படுத்தியதாக பிவிபி சினிமா, இயக்குமர் வம்சி, கார்த்தி மற்றும் நாகார்ஜுனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.


Case against the release of Thozha

இந்தப் படத்தை எந்த வடிவிலும் வெளியிட தனது மனுவில் தடை கோரியுள்ளார்.


சென்னை 14வது உதவி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.


தோழா படம் வெளியாகுமா இல்லையா என்பது நாளைதான் தெரியும்.

English summary
A case has been filed against the release of Thozha Movie release for using the title without permission.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil