»   »  ஆம்பள படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

ஆம்பள படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் ஆம்பள படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

விஷால் - ஹன்சிகா நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப் படம் நாளை மறுநாள் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

படத்தின் தியேட்டர்கள் லிஸ்ட் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று திடீரென்று ஸ்ரீசாய் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

Case filed against Aambala title dismissed

அதில், ஆம்பள என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்க கில்டில் தான் ஏற்கெனவே பதிவு செய்து 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், இதற்காக ரூ 40 லட்சம் செலவழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே விஷாலின் ஆம்பள வெளியானால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவை விசாரித்த சென்னை சிட்டி 15வது சிவில் நீதிமன்றம், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

விசாரணையில், மனுதாரரின் வாதத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததாலும், கில்டில் பதிவு செய்யும் படங்களுக்கு சென்சார் அனுமதியில்லை என்பதாலும் இந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

English summary
Chennai city civil court has been dismissed the case against Vishal's Aambala title.
Please Wait while comments are loading...