»   »  நடிகர் சந்தானத்தை தேடும் போலீஸ்- அவரது படங்கள் என்னாகும்?

நடிகர் சந்தானத்தை தேடும் போலீஸ்- அவரது படங்கள் என்னாகும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பண விவகாரத்தில் கைகலப்பாகி, கட்டுமான நிறுவன உரிமையாளரைத் தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில், நடிகர் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரையும் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், நடிகர் சந்தானம் தலைமறைவாக இருந்து வருகிறாராம். விரைவில் வெளியாகவிருக்கும் அவரது படங்களுக்கு இந்தப் பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

பில்டர் சண்முகசுந்தரம்

பில்டர் சண்முகசுந்தரம்

நடிகர் சந்தானமும், கட்டுமான நிறுவன உரிமையாளர் சண்முகசுந்தரமும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் இடத்தை வாங்கி அதில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி சந்தானம் சண்முகசுந்தரத்திடம் பெரிய தொகை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சண்முகசுந்தரம் கட்டுமானப் பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 பண விவகாரம்

பண விவகாரம்

நடிகர் சந்தானம் இதுகுறித்து பலமுறை சண்முகசுந்தரத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லையாம். சண்முகசுந்தரத்திற்கும் சந்தானத்திற்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மாலை சந்தானம் தனது மேனேஜர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

 மாறி மாறித் தாக்க்குதல்

மாறி மாறித் தாக்க்குதல்

இந்தப் பிரச்னையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் மாறி, மாறித் தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் அனைவரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சண்டையில் நடிகர் சந்தானம், சண்முகசுந்தரம் உட்பட பலரும் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்த விவகாரத்தில், சந்தானம் தன்னைத் தாக்கியதாக பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர், வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் புகார் அளித்திருக்கிறார். இவர் வளசரவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சந்தானம் தரப்பிலிருந்தும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. சந்தானம், வடபழனியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இந்நிலையில், சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது வளசரவாக்கம் போலீஸ். இருதரப்பினரும் மாற்றி மாற்றிப் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பின்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சந்தானம் படங்கள்

சந்தானம் படங்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், 'சர்வர் சுந்தரம்' படம் இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. சந்தானம் நடிப்பில் 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் இறுதிக்கட்டத் தயாரிப்பில் இருக்கின்றன. தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

தள்ளிப்போகுமா

தள்ளிப்போகுமா

தற்போது இந்தப் பிரச்னையால், 'சர்வர் சுந்தரம்' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. நடிகர் சந்தானம் மீது போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வெளிவரவிருக்கும் அவரது படங்கள் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'சர்வர் சுந்தரம்' படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Constructions owner Shanmugasundaram has filed a complaint against Actor Santhanam in Valasaravakkam police station. The issue has been bogged down and actor Santhanam has been booked under three sections. So, the release of Santhanam films is may be complex.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil