»   »  கூடுதல் கட்டண வசூல்... பைரவா படத்துக்கு எதிராக வழக்கு!

கூடுதல் கட்டண வசூல்... பைரவா படத்துக்கு எதிராக வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் விஜய்யின் பைரவா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், படம் வெளியாவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Case filed against Bairava

பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து, 12-ம் தேதிக்குள் படத்தயாரிப்பாளர், தமிழக அரசு, திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி புகார் அளிக்கக்கூடிய விவரத்தையும் சமர்ப்பிக்க உத்தவிரப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் வழக்கால் படம் திட்டமிட்டப்படி 12-ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

English summary
A case has been filed against Vijay's Bairava for collecting higher price for tickets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil