Just In
- 5 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 12 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 34 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 43 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
Don't Miss!
- Automobiles
ஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குடிக்கிற படத்துக்கு வரிவிலக்கா? ‘மான் கராத்தே’ விற்கு எதிராக வழக்கு
சென்னை: மது குடிப்பது போல சீன் வைத்துள்ள மான் கராத்தே' படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது. ஆனால் இந்த வரிவிலக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஐ. ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
'தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகையை அளித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்துக்கும் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகை அளித்துள்ளது.
'மான் கராத்தே' என்ற பெயர் தமிழ் பெயர் அல்ல. மேலும் அந்தப் படத்தில் ஆங்கில பாடலும் மதுபானம் உட்கொள்வதை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு மாறானதாகும்.
எனவே 'மான் கராத்தே' படத்துக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது 'மான் கராத்தே' படத்துக்கான கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் வாதிட்டார். இதனையடுத்து இந்த மனுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.