»   »  கபாலிக்கு அதிகக் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!

கபாலிக்கு அதிகக் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடித்து அண்மையில் வெளியான கபாலி படத்துக்கு ஆரம்ப நாட்கள் அதிகக் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:


Case to punish theaters collecting heavy price for Kabali

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி சென்றபோது, ஒரு டிக்கெட் ரூ.300 என்ற வீதத்தில் தியேட்டர் நிர்வாகம் விற்றது. ஆனால், அரசு நிர்ணயம் செய்த கட்டணம் ரூ.50 தான். 'கபாலி' படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட 4 முதல் 5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளனர்.


இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.250 கோடிக்கு மேல் தியேட்டர் உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஆன் - லைன் மூலம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.


இதையடுத்து நீதிபதி, 'கபாலி' படம் வெளியாவதற்கு முன்பே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தேன். அந்த உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று அரசு வக்கீலிடம் கேட்டார். அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிப்பதாக அரசு வக்கீல் பதிலளித்தார்.


விதி மீறல்


இதற்கு நீதிபதி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சிறிய தியேட்டர்கள் மீதுதான். அதிகாரிகள் பெரிய தியேட்டர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சினிமாக்காரர்களுக்கு மட்டும் என்ன தனிச்சட்டமா? பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிடும்.


இலவசமாக டிக்கெட் கிடைப்பதால் அனுமதியா?


அதிகாலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் திரைபடம் வெளியானது. இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்? பெரிய நடிகர்களின் படத்துக்கு இலவசமாக டிக்கெட்டுகள் கிடைப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து விடுகின்றனரா?


அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளை கேட்டு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவேண்டும். ரூ.120 டிக்கெட்டை ரூ.500, ரூ.700, ரூ.1,000 என்று விற்பனை செய்வது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லையா?


எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை அக்டோபர் 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்," என்று உத்தரவிட்டார்.

English summary
A petition has filed against Theaters those collecting higher prices for Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil