»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:
பல லட்சரூபாய் செக் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்டு வழக்கில் திரைப்பட இயக்குனர் சேரன் புதன்கிழமைநீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாரதி கண்ணம்மா மூலம் திரையுலகிற்கு அறிகமானார் சேரன். பொற்காலம் திரைப்படத்தின் மூலம் சேரனுக்கு பணப்பிரச்சனைஏற்பட்டது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் தயாரிப்புமானேஜராக இருந்தவர் தேனப்பன்.

இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மூலம் சேரனுக்கு ஒன்பது லட்ச ரூபாய் கடனாகக் கொடுத்தார்.

இந்தக் கடன் தற்பொழுது வட்டியும் அசலுமாக 25 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. பலமுறை சேரனிடம் தேனப்பன் பணத்தைதருமாறு கேட்டுக்கொண்டார். பொறுமையிழந்த தேனப்பன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இது பற்றித் தெரிவித்தார்.உடனே கே.எஸ்.ரவிக்குமார் சேரனை கண்டித்தாராம்.

இதையடுத்து சேரன் தேனப்பனுக்கு அவ்வப்பொழுது செக்குகளை வழங்கினார். செக்குகள் அனைத்தும் பணமில்லாமல்திரும்பிவந்தன.

இதுபற்றி தேனப்பன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சைதாப்பேட்டை குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்தார்.கோடம்பாக்கம் காவல் நிலையம் மூலமாக சேரனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆகஸ்ட் 4-ம் தேதி 17வது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் இல்லையெனில் கைது செய்ய நோட்டீ பிறப்பிக்கப்படும் என்று அந்தநோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்துஇயக்குனர் சேரன் நேற்று காலை தனது வக்கீலுடன் சைதாப்பேட்டை கோர்ட்டில்ஆஜரானார். வரும் 9-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி.

Read more about: actor, director, finance, tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil