»   »  பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது: நடிகை கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மகள் நடனம் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள கஸ்தூரி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

நடிகைகள்

நடிகைகள்

நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள்.

படங்கள்

படங்கள்

சிலர் எதிர்பார்த்தது போன்று நடக்காததால் என்னை சில படங்களில் இருந்து நீக்கியுள்ளனர். அதுவும் ஒரேயொரு ஹீரோவால் தான் எனக்கு இப்படி நடந்தது.

ஹீரோ

ஹீரோ

ஹீரோ அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக உள்ளார். அவருக்கு ஈகோ விஷயம் என்று நினைக்கிறேன். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் அவருக்கு நோ சொன்னால் பிடிக்காது.

இரண்டு படம்

இரண்டு படம்

அவருடன் ஒரு படம் நடித்தேன். படப்பிடிப்பு நடந்தபோது எல்லாம் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும் என்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றினார்.

படுக்கை

படுக்கை

பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது. இது கால காலமாக நடந்து வருகிறது என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Kasturi said that casting couch in film industry is not a myth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil