சென்னை: சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவது உண்மையே என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்று காலம் காலமாக கூறப்படுகிறது. பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தமன்னா கூறியதாவது,
தொல்லை
சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே. ஆனால் அதை பிற நடிகைகள் சொல்லியே எனக்கு தெரியும். எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை.
நடிப்பு
நான் 12 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் உள்ளேன். நான் நடிக்க வந்த புதிதில் இருந்து இதுவரை யாரும் என்னை தப்பாக பார்க்கவில்லை. நாம் தேர்வு செய்யும் வழியை பொறுத்தே நல்லதும், கெட்டதும் வரும்.
பேச்சு
தென்னிந்திய திரையுலகில் மட்டும் அல்ல பாலிவுட்டிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. சிலர் அதை வெளியே கூறுகிறார்கள், பலர் மவுனமாக இருக்கிறார்கள் என்றார் தமன்னா.
வாய்ப்பு
பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு தேடிச் சென்றால் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில முன்னணி நடிகைகள், நடிகர்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.