Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பட வாய்ப்புக்காக நடிகைகளை செக்ஸ்க்கு அழைப்பது உண்மைதான்.. முதல்வரிடம் நீதிபதி குழு அதிர்ச்சி அறிக்கை
திருவனந்தபுரம்: பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என நீதிபதி ஆணையத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சினிமாவில் வாய்ப்பு பெற விரும்பும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உலகம் முழுக்க அரங்கேறி வருகிறது. இதுபோன்ற பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே மீடூ இயக்கம் தொடங்கப்பட்டது.
மீடூ இயக்கத்தின் மூலம் ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாத்துறையிலும், வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

பாலியல் தொல்லை
இதில் பல திரை பிரபலங்கள் மீதும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பாலிவுட் நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மீடூவில் பகிர்ந்து கொண்டனர்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார்.

மலையாள சினிமா
அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக பாடகி சின்மயி, நடிகை சோனா உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்து வருகிறது.

நடிகர்கள் கைது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதில் மலையாள நடிகர் திலீப் உட்பட பலருக்கு தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்ட்டனர்.

குவிந்த புகார்கள்
இந்நிலையில் மலையாள நடிப்பு வாய்ப்பிற்காக நடிகர்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரும் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் குவிந்தன.

விசாரணை கமிஷன்
இதனை தொடர்ந்து நடிகைகளின் பாதுகாப்பிற்காக மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து, மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசாரண கமிஷன் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை அறிக்கை
அதன்படி, நீதிபதி ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை கமிஷனை கேரள அரசு அமைத்தது. இந்த விசாரணை கமிஷன் மலையாள சினிமா நடிகர், நடிகைகள், பெண் கலைஞர்களிடம் நேரடியாக நடத்தியது. இந்த கமிஷனின் அறிக்கையை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் நீதிபதி ஹேமா வழங்கினார்.

மறைமுகமாக தடை
அதில் மலையாள சினிமாத் துறையில் நடிகைகள் உட்பட பெண் கலைஞர்கள் பல்வேறு பாலியல் கொடுமைகளை சந்தித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உடன்படாத நடிகைகளுக்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

படுக்கையை பகிரனும்
முன்னணி நடிகைகளும் கூட இதில் இருந்து தப்ப முடியாது. படப்பிடிப்பு தளங்களில் மது, போதை மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

பலரும் கலக்கம்
இதனை தடுக்க சினமாத்துறையினருக்கு என கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் விசாரணை கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷனனின் இந்த அறிக்கையால் பலரும் மலையாள திரைத்துறையை சேர்ந்த பலரும் கலக்கத்தில் உள்ளனர்.