கொச்சி: மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உண்டு என்று மற்றும் ஒரு நடிகை தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று நடிகைகள் அண்மை காலமாக கூறி வருகிறார்கள்.
அந்த கொடுமை பற்றி பேச நடிகைகளுக்கு தற்போது தான் துணிச்சல் வந்துள்ளது.
ஹிமா ஷங்கர்
படுக்கைக்கு வந்தால் நடிக்கலாம் என்று தன்னை 3 பேர் அழைத்ததாக மலையாள நடிகை ஹிமா ஷங்கர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பார்வதி மேனன்
மலையாள திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் நடிகைகளை உரிமையுடன் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பார்வதி மேனன் முன்பு தெரிவித்தார்.
மல்லுவுட்
மலையாள திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது என்று ஒவ்வொரு நடிகையாக கூறத் துவங்கியுள்ளனர்.
அம்மா
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கமே இல்லை என்று மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் இன்னொசென்ட் தெரிவித்தார். தற்போது அவர் என்ன சொல்லப் போகிறார்?
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.