»   »  வாரிசு நடிகையுடன் சண்டையா, எவன் சொன்னது?: இலியானா

வாரிசு நடிகையுடன் சண்டையா, எவன் சொன்னது?: இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முபாரகான் படத்தில் நடித்தபோது இலியானாவுக்கும், அதியா ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின.

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜுன் கபூர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் முபாரகான். படத்தில் இலியானா, நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா என்று இரண்டு ஹீரோயின்கள்.

அர்ஜுன் கபூரின் சித்தப்பா அனில் கபூரும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சண்டை

சண்டை

ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் சண்டை வரும் என்பது எழுதப்படாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் முபாரகான் ஹீரோயின்களுக்கு இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.

இலியானா

இலியானா

செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது யாரும் கேட்பதற்கு முன்பே அதியாவுடனான சண்டை குறித்து இலியானா பேசினார். தனக்கும், அதியாவுக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என்றார்.

சந்தேகம்

சந்தேகம்

செய்தியாளர் சந்திப்பில் இலியானா தானாக முன்வந்து சண்டை பற்றி பேசியது படக்குழுவினர் அவருக்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலருக்கு எழுப்பியுள்ளது.

அதியா ஷெட்டி

அதியா ஷெட்டி

இலியானாவுடன் எந்த சண்டையும் இல்லை. அவர் சீனியர் என்பதால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக அதியா ஷெட்டி தெரிவித்துள்ளார். இது அதியாவின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mubarakan leading ladies Ileana and Athiya Shetty have made it clear that all is well between them.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil