»   »  ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.65 லட்சம் வாங்கிய ஆர்யா ஹீரோயின்

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.65 லட்சம் வாங்கிய ஆர்யா ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் மகன் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட கேத்ரீன் தெரஸாவுக்கு ரூ. 65 லட்சம் சம்பளமாம்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் குத்துப்பாடல் ஒன்று வைத்துள்ளனர்.

கேத்ரீன் தெரஸா

கேத்ரீன் தெரஸா

தெலுங்கு திரையுலகில் கேத்ரீன் தெரஸா பிரபலமாக உள்ளார். அதனால் அவரை குத்துப்பாட்டுக்கு ஆட வைக்க நினைத்து அவரிடம் கேட்டுள்ளனர். அவரும் டான்ஸ் ஆட சம்மதித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட கேத்ரீன் தெரஸா ரூ.65 லட்சம் கேட்டுள்ளார். சுரேஷும் சந்தோஷமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். என்னாது ஒரு பாட்டுக்கு ரூ.65 லட்சமா என்று டோலிவுட் வியக்கிறது.

நடனம்

நடனம்

கேத்ரீன் தெரஸா நல்லா ஆடுவார். அதனால் அவருக்கு ரூ. 65 லட்சம் கொடுப்பதில் தப்பு இல்லை என்று படத் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கேத்ரீன் ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கே இந்த சம்பளம் இல்லையாம்.

தமன்னா

தமன்னா

முன்னதாக ஸ்ரீனிவாஸ் நடித்த அல்லுடு சீனுவில் தமன்னா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். அல்லுடு சீனுவில் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக சமந்தா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Catherine Teresa has been reportedly paid Rs. 65 lakhs to do an item number in Bellamkonda Srinivas' upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil