twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொத்துக்காக உதவியாளர், நண்பரால் சோனாலி போகத் கொலை..சிபிஜ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    |

    புதுடெல்லி : முன்னாள் நடிகையும் ஹரியானா பாஜக தலைவருமான சோனாலி போகத்தை சொத்துக்காக உதவியாளர், நண்பர் ஆகியோர் கொலை செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

    சோனாலி போகத், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    முதற்கட்ட தகவல்களின்படி, சோனாலி போகத் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், இது இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    டிக்டாக் பிரபலம் சோனாலி கொலை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு மாற்றம்? டிக்டாக் பிரபலம் சோனாலி கொலை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு மாற்றம்?

    உடலில் காயங்கள்

    உடலில் காயங்கள்

    பிரதேச பரிசோதனை அறிக்கையில் அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்ததால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சோனாலி போகத்தின் பானத்தில் எம்.டி.எம்.ஏ என்ற போதை பொருளை கலந்து கொடுத்துள்ளனர். இதனால், சோனாலி, தொடர்ந்து இரண்டு மணிநேரம் வாந்தி எடுத்து மயங்கியதாக அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளிவந்தன. இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

    உதவியாளர், நண்பர் கைது

    உதவியாளர், நண்பர் கைது

    இதையடுத்து, சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் அவருக்கு கட்டாயப்படுத்தி போதைப் பொருள் உட்கொள்ள வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    சொத்துக்காக கொலை

    சொத்துக்காக கொலை

    இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வடக்கு கோவாவில் உள்ள மாபுசாவில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிக்கையில், சோனாலி போகத்தின் உதவியாளர் மற்றும் நண்பர்கள் அவரின் சொத்துக்களை அபரிக்கும் நோக்கத்தில் சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்துள்ளதாக சிபிஜ பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

    டிசம்பரில் அடுத்த விசாரணை

    டிசம்பரில் அடுத்த விசாரணை

    மேலும் சோனாலி போகத்தின் சொத்தை அபகரிக்கவும் அவரது சொத்துகளை பெற பத்திரத்தில் கையெழுத்தை பெறவும் சங்கவானும் சுக்வீந்தரும் முயற்சித்துள்ளதாக சிபிஜ அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாலியின் வழக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கைது

    ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கைது

    சோனாலி போகத் மர்மாக மரணமடைந்த தனியார் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் எட்வின் நுான்ஸ் கோவா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு சிபிஜக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    English summary
    former actor and Haryana BJP leader Sonali Phogat was found dead in her hotel room in Goa. CBI has filed a chargesheet against her personal assistant and his friend
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X