»   »  'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே!

'அவங்க' மரணத்தை போன்றே கலாபவன் மணியின் மரண மர்மமும் இன்னும் புரியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணி இறந்து ஓராண்டு முடிந்த பிறகு அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மிமிக்ரி கலைஞராக இருந்து நடிகர் ஆனவர் கலாபவன் மணி. மலையாளம், தமிழ் படங்களில் வில்லன், காமெடி கதாபாத்திரம், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி அவர் திடீர் என மரணம் அடைந்தார்.

பண்ணை வீடு

பண்ணை வீடு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி மணி தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் சாலக்குடி அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் மது அருந்தினார். மது அருந்திய பிறகு அவர் மயங்கி விழுந்தார்.

மரணம்

மரணம்

பண்ணை வீட்டில் மயங்கிய மணியை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 6ம் தேதி உயிர் இழந்தார்.

விஷம்

விஷம்

மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் சகோதரர் போலீசில் புகார் அளித்தனர். பிரேத பரிசோதனையில் மணி அருந்திய மதுவில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

போலீஸ்

போலீஸ்

மணியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிக்குழு அமைத்து விசாரித்தனர். பலரிடம் விசாரித்து இறுதியில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி விசாரணையை நிறுத்தினர்.

சிபிஐ

சிபிஐ

கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ மறுத்தது. தாங்கள் ஏற்கனவே பல வழக்குகளை விசாரிப்பதால் இதையும் சேர்த்து முடியாது என்று கூறியது. இந்நிலையில் தான் கேரள உயர் நீதிமன்றம் மணியின் வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

English summary
Actor Kalabhavan Mani's case is getting life after Kerala high court has ordered CBI to investigate it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil