»   »  அறம் செலிபிரிட்டி ஷோ... நயன்தாராவுக்கு பிரபலங்களின் புகழ் மழை!

அறம் செலிபிரிட்டி ஷோ... நயன்தாராவுக்கு பிரபலங்களின் புகழ் மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இரவு அறம் படத்தின் செலிபிரிட்டி ஷோ பார்த்த பிறகு, நயன்தாராவின் நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டனர் திரையுலகப் பிரபலங்கள்.

நயன்தாரா, ஈ ராமதாஸ், சுனு லட்சுமி, முத்துராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அறம். கோபி நயினார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரமாண்ட ரிலீஸ்

பிரமாண்ட ரிலீஸ்

படம் தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இன்று வெளியானது. ஒரு பெரிய நடிகரின் படத்துக்குரிய முக்கியத்துவமும் எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு இருந்ததால் நல்ல திரையரங்குகள் கிடைத்துள்ளன.

பிரபலங்கள்

பிரபலங்கள்

படத்தின் சிறப்புக் காட்சி நேற்று இரவு சத்யம் திரையரங்கில் நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். நாயகி நயன்தாரா, இயக்குநர் கோபி நயினார், படத்தில் நடித்த ஈ ராமதாஸ், முத்துராமன், சுனு லட்சுமி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் சற்குணம், விக்னேஷ் சிவன், நடிகை ரேவதி, தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உள்பட பலரும் வந்திருந்தனர்.

கைத்தட்டல்

கைத்தட்டல்


காட்சி முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினர். நயன்தாராவுக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மிகச் சிறந்த கதை, நயன்தாராவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு இந்தப் படத்தை இந்த ஆண்டின் சிறந்த படமாக ஆக்கியுள்ளது என பாராட்டினர்.

நயன்தாரா அபாரம்

நயன்தாரா அபாரம்

"நயன்தாரா அர்ப்பணிப்பு அபாரம், அபூர்வம். நாட்டு நிலையைத் தெளிவாக காட்டும் கண்ணாடி இந்தப் படம். இயக்கம் எழுத்துக்கு தனிப்பட்ட தலை தாழ்ந்த வணக்கம். நானும் ஒர் அங்கம் என்பதில் பெருமை. தயாரிப்பாளர் ராஜேஷ் வெற்றி உறுதி," என்றார் இயக்குநரும் நடிகருமான ஈ ராமதாஸ்.

English summary
Film personalities have praised Nayanthara a lot for her performance in Aramm movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil