twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் நாயகன்.. இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள்.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து!

    |

    சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    ஜனவரி 6… ஆஸ்கர் நாயகன் அவதரித்த நாள்..!

    பிரபல இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான் 1966ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சங்கர்.

    அர்ச்சனா அப்போ போட்ட விபூதி இன்னும் வேலை செய்யுது போல.. ரியோ அன்ட் சோமை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! அர்ச்சனா அப்போ போட்ட விபூதி இன்னும் வேலை செய்யுது போல.. ரியோ அன்ட் சோமை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    திலீப் குமார் என்ற இயற்பெயரை கொண்ட இவர் தனது தந்தை மறைவுக்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதன்பின் தன்னுடைய பெயலை ஏ.ஆர்.ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.

    இசையமையப்பாளர்களிடம் பணி

    இசையமையப்பாளர்களிடம் பணி

    இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது 11ஆவது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றினார்.

    தேசிய விருது..

    தேசிய விருது..

    1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஏஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ஏஆர் ரஹ்மான், அடுத்தடுத்த தமிழ் மலையாளம், தெலுங்கு என பிஸியானார்.

    125 படங்களுக்கு மேல்

    125 படங்களுக்கு மேல்

    இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரங்கீலா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்தார் ஏஆர் ரஹ்மான். இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். தமிழ், இந்தி, மலையாளம். தெலுங்கு மொழிகள் மட்டுமின்றி இங்கிலிஷ் மற்றும் சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.

    ரிங்டோன்ஸ்

    ரிங்டோன்ஸ்


    ஏராளமான ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். பல நாடுகளில் இசைக் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மொபைல் ரிங்டோன்ஸ், சிக்னேட்சர் ட்யூன்ஸ் என இசையால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருகிறார். மேலும் சென்னையில் இசைப்பள்ளியையும் நடத்தி வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

    2 ஆஸ்கர் விருதுகள்

    2 ஆஸ்கர் விருதுகள்


    இதுவரை 6 தேசிய விருதுகள், 6 தமிழ அரசின் விருதுகள், ஏராளமனா ஃபிலிம் ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் உலகளவில் உயரியதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமையும் ஏஆர் ரஹ்மானையே சேரும். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏஆர் ரஹ்மான்.

    பத்ம விருதுகள்

    பத்ம விருதுகள்

    கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது, கிராமி விருதுகள், வோர்ல்டு சவுண்ட் ட்ராக் விருதுகள் என ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார் ரஹ்மான். இசைத்துறைக்கு ஏஆர் ரஹ்மான் ஆற்றிய தொண்டை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கியுள்ளது.

    பிரபலங்கள் வாழ்த்து

    பிரபலங்கள் வாழ்த்து

    இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ஏஆர் ரஹ்மானுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பிறந்து நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பாடலாசிரியர் விவேக்

    பாடலாசிரியர் விவேக்

    #HappyBirthdayARRahman என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். பாடலாசிரியர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு தூய ஆன்மா. நாம் நம்மை மேம்படுத்துவதற்கான ஒரு அளவுகோல். ஒரு வழிகாட்டியும் குணப்படுத்துபவரும். ஜீனியஸுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான நாட்கள் பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    பம்பாய் படத்தின் இசை

    ரஹ்மானின் ரசிகரான இவர், எல்லோருடைய வாழ்க்கையும் அமேஸிங்காக்க பிறந்த ஜீனியஸ் என்று ஏஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், பம்பாய் படத்தில் ரஹ்மானின் பின்னணி இசையில் இடம்பெற்ற காட்சியையும் ஷேர் செய்துள்ளார்.

    English summary
    AR Rahman celebrates his 55th birthday today. Celebrities and fans wishing AR Rahman on his birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X